நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய பக்தி சபையினர், அருட்பணி சபையினர், மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து காலை உணவு, மரக்கறி வகைகள், தேநீர், தேங்காய் என்பவற்றை விற்பனை செய்தனர்.

By admin