யாழ்ப்பாணம் சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய இளையோர், பக்தி சபையினர், மேய்ப்புப்பணி சபையினர் இணைந்து காலை உணவு, இறைச்சி வகைகள், மரக்கறி வகைகள், பழங்கள், தேநீர், மலிகை பொருட்கள், உடைகள், அழகு சாதனப்பொருட்கள் என்பவற்றை விற்பனை செய்ததுடன் பாடகர் குழாமினர் விளையாட்டு நிகழ்வுகளையும் முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

By admin