சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் மறையறிவுப் போட்டி ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை ஓல்ரன் புனித மரியன்னை ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் தலைமையில் திருமறைப் பணியாளர்களின் ஒழுங்குபடுத்தலில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இப்போட்டியில் மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான வினா விடை, பாடல், ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் 150ற்கும் அதிகமான மாணவர்களும் 50ற்கும் அதிகமான பெரியவர்களும் பங்குபற்றினர்.

By admin