மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வோதய அலுவலக உத்தியோகத்தர்களுக்கான காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை வாழ்வோதய கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

வாழ்வோதய நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. சூரியராஜா அவர்கள் கலந்து காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கங்கள் தொடர்பாக விளக்கவுரை வழங்கினார்.

இக்கருத்தமர்வில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், எல் நினோ நிகழ்வினால் ஏற்படக்கூடிய காலநிலை மாறுபாடுகள், மழை வீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் அபாயங்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

By admin