மானிப்பாய் பங்கின் சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

