யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் யாழ். புனித மரியன்னை பேராலயம் மற்றும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகவும், உரும்பிராய் பங்கில் பதில் பங்குத்தந்தையாகவும், மிருசுவில், நெடுந்தீவு, செம்பியன்பற்று, ஆணைக்கோட்டை, ஊறணி, ஒட்டகப்புலம் மற்றும் திருநெல்வேலி பங்குத்தந்தையாகவும் கனடா ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குனராகவும், கனடா கத்தரீன் ஆலய பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.

அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அருட்தந்தையின் பணிவாழ்வுக்காக நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin