சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய மறைக்கல்வி மாணவிகளுக்கான இறையழைத்தல் பாசறை சித்திரை மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து கருத்துரை, திருச்செபமாலை, விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள் ஊடாக மாணவிகளை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 15 மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் சுன்னாகம் சூராவத்தை புனித திரேசாள் ஆலய பிள்ளைக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு சித்திரை மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

