இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு யூபிலி கலைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட “வழித்தடங்கள்” ஆவணத்தொகுப்பு இறுவட்டு “யூதாவே உம் புகழ் பாடி” காட்சியுடன் கானம் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு சித்திரை மாதம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கலைக்குழு தலைவர் திரு. றொபின்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “யூதாவே உம் புகழ் பாடி” காட்சியுடன் கானம் இறுவட்டை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றொயிஸ்ரன் அவர்களும் “வழித்தடங்கள்” ஆவணத்தொகுப்பை பங்குத்தந்தை அவர்களும் வெளியிட்டுவைத்தனர்.

திருமதி இயூயின் சர்மிலானி அவர்களின் எழுத்துருவில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் யதுசா யான்சன் அவர்களின் இசையமைப்பில் உருவான “யூதாவே உம் புகழ் பாடி” பாடல் திரு. விஜயகுமார் அவர்களால் பாடப்பட்டது.

அத்துடன் யூபிலி விழாக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கரப்பந்தாட்ட மற்றும் எறிபந்து போட்டிகளின் இறுதிப்போட்டி சித்திரை மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை ஆலய விளையாட்டு திடலில் நடைபெற்றது.

விளையாட்டு குழு தலைவர் திரு. ஜெனிஸ்ரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக இளையோர் சேவை அதிகாரி திரு. அகிலறாஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் நலன்விரும்பி திரு. வித்தியானந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் திரு. அருமைத்துரை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. யூட் சபிதாஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

By admin