மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை அதிபர் அருட்சகோதரி அந்தோனிப்பிள்ளை நீற்றா அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு சித்தரை மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் நடைற்றது.

இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொபெடர்ந்து மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் அருட்சகோதரிக்கான கௌரவிப்பு மற்றும் யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரியின் உறவினர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பங்கு மக்களெனன பலரும் கலந்து செபித்தனர்.

By admin