யாழ். திருமறைக்கலாமன்ற பொங்கல் நிகழ்வுகள்

யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள் 15ஆம் 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் செபமாலைதாசர்…

பண்டத்தரிப்பு பங்கில் செயற்பாட்டு மகிழ்வோம் சிறப்பு நிகழ்வு

மறைக்கல்வி மாணவர்களையும் மறையாசிரியர்களையும் இணைத்து பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டு மகிழ்வோம் சிறப்பு நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அருட்சகோதரர் ஸ்டீபன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ்…

“ஒன்றிணைந்த தலைமைத்துவம் மற்றும் உளவியல் ஆற்றுப்படுத்தல்” செயலமர்வு

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட “ஒன்றிணைந்த தலைமைத்துவம் மற்றும் உளவியல் ஆற்றுப்படுத்தல்” செயலமர்வு தை மாதம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகளின்…

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

மறைக்கல்வி மாணவர்களிடையே இசைக்கருவிகள் மீட்டும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முகமாக மானிப்பாய் புனித அன்னாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை தை மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின்…

தேசிய அன்பிய மாநாடு

தேசிய அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட அன்பிய மாநாடு தை மாதம் 12, 13ஆம் திகதிகளில் கொழும்பு தேவத்தை பசிலிக்காவில் நடைபெற்றது. தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான்ன அவர்களின் தலைமையில் ஆணைக்குழுவுக்கு பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க…