யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இயங்கிவரும் Mekmaa Pvt. Ltd நிறுவனத்தின் Mekmaa Cricket Academy துடுப்பாட்டப் பயிற்சி நிலைய திறப்பு விழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
Mekmaa Pvt. Ltd நிறுவன உரிமையாளர் திரு. ஜோண் றஜீவ் மற்றும் இயக்குநர் திருமதி ஜோண் றஜீவ் கமலினி ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை பிரதி மேயர் கௌரவ இம்மானுவேல் தயாளன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தார்.
யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்க தலைவரும், இலங்கை தேசிய இளையோர் துடுப்பாட்ட அணித் தெரிவாளருமான திரு. A.S. நிஸாந்தன் மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரும், விளையாட்டுச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவருமான அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை தர்சன் லெம்பேட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளென பலரும் இணைந்துகொண்டனர்.
“Learn – Play – Achieve” என்ற உயரிய நோக்கத்துடன் பயணிக்கும் Mekmaa Pvt. Ltd நிறுவனம் மாணவர்களிடையே ஒழுக்கம், திறமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய உயரிய பண்புகளை வளர்க்கும் நோக்கில் Mekmaa Kids’ Education மற்றும் Mekmaa Chess Academy போன்றவற்றை இயக்கிவருவதுடன் தற்போது Mekmaa Cricket Academy யை ஆரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி நிலையத்தில் துடுப்பந்தாட்டம், ரெனிஸ், மேசைப்பந்து, காற்பந்தாட்டம், Badminton போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள முடியுமெனவும் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் விண்ணப்பபடிவங்களை யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இயங்கிவரும் Mekmaa Pvt. Ltd நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

