விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டுவிழா ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆங்கில நாடகம், கவிதை, பாடல், நடனம், தமிழ் நகைச்சுவை, விடுகதை, சிறார்கள் மற்றும் பெற்றோரின் தமிழ் பாரம்பரிய நடனங்கள் என்பன இடம்பெற்றன.

முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ், இலங்கை வங்கி மல்லாவி கிளை முகாமையாளர் திரு. ஜெனாட் நியூமன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் மற்றும் புலோப்பளை வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை இல்ல தலைவி அருட்சகோதரி ஸ்ரெல்லா மேரி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By admin