யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆடி மாதம் 04ஆம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் மற்றும் அருட்தந்தை நிலான் யூலியஸ் ஆகியோர் இணைந்து அன்பிய ஏழு படிமுறை தொடர்பாகவும் அன்பிய வாழ்வு தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கினர்.

தொடர்ந்து மறைக்கோட்ட செயற்குழு மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் குழு தெரிவும் இடம்பெற்றது.

செயற்குழு தெரிவில் கிளிநொச்சி பங்கை சேர்ந்த திருமதி விஜிதரன் எமிலியா அவர்கள் செயலாளராகவும் உருத்திரபுரம் பங்கைச் சேர்ந்த திரு. செபமாலைதாசன் கியூபெட்றாஜ் அவர்கள் பொருளாளராகவும் வலைப்பாடு பங்கைச் சேர்ந்த திருமதி. உதயசீலன் அமல ஜெஸ்சி அவர்கள் உப செயலாளராகவும் பூநகரி பங்கை சேர்ந்த திருமதி. அல்கட்ரஸ் தமிழரசி அவர்கள் ஊடக உதவியாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 65 அன்பிய ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin