தர்மபுரம் பங்கின் பெரியகுளம் புனித செபஸ்தியார் ஆலய முகப்பு திறப்புவிழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனிதரின் திருவிழாவிற்கான ஆயத்த நாளின் முதல் நாள் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆலய முகப்பை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பங்கு மக்களென பலரும் கலந்துகொண்டனர்.
இம்முகப்பு கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை யாழ். மறைமாவட்ட ஆயர் மற்றும் பங்கு மக்கள் வழங்கியிருந்தனர்.

