Author: admin

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம்

யாழ். மறைமாவட்ட மறைக்கோட்டங்களில் பணியாற்றும் அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம் வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை கிளாரட் அக கிளரேசிய இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறையாசிரியர்களின் கள அனுபவப்பயணம்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவப்பயணம் சித்திரை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் வைகாசி மாதம் 02ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளறேசியன் சபை அருட்தந்தை நேசன்…

வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 30 குருதிக்கொடையாளர்கள்…

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…