இலங்கை தேசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணிக்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் விக்மிலன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நவம்பர் 08ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை லாவோஸில் நடைபெறவுள்ள ஆசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்துத் தொடரில் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

