திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரியும் யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை ஆசிரியருமான றோமலா அன்ரனி அவர்களின் ‘பாடக்கலைத்திட்ட முகாமைத்துவத்தில் டிஜிட்டல் தொழினுட்பத்தின் பிரயோகம்’ நூல் வெளியீடு நவம்பர் மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி ஐங்கரன் அவர்கள் வழங்கினார்.

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட விலங்கியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. ஈஸ்வரமோகன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin