முழங்காவில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முழங்காவில் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயத்திலும் சோலை புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்திலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து சிறுவர் முதியோர் கௌரவிப்பும் சிறுவர்களின் திருச்செபமாலையும் நடைபெற்றன.

