யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வானியல் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் வானியல் மன்றத்தால் கல்லூரி மட்டத்தில் நடத்தப்பட்ட வானியல் வினா- விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, வானியல் மன்றத்தால் “APOLLO” மலரின் இரண்டாவது இதழ் வெளியிடூம் மாணவர்களின் நடனம், நவீன வானியல் செய்திகள் போன்ற கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
கல்லூரியின் பழைய மாணவனும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி திபுசியஸ் தனேஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌதீகவியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர் ஜோ காருண்யா மகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அயற் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

