தேசிய வாசிப்பு மாத சிறப்பு நிகழ்வாக யாழ்ப்பாணம் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தபால் முத்திரை அறிமுகமும் கண்காட்சியும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலையின் திறன் வகுப்பறையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. யூட் கருணாகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கண்காட்சியை ஆரம்பித்து பாடசாலையின் முதல் அதிபர் அருட்சகோதரி விக்ரறின் அவர்களின் உருவம் தரித்த முத்திரையையும் அறிமுகம் செய்துவைத்தார்.
இக்கண்காட்சியில் பண்டைய கால முத்திரைகள், நாணயங்கள் மற்றும் புராதன படங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

