அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதரர்களுக்கான குருத்துவ மற்றும் திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டர்களான நவரத்தினராஜா அஜந்தன் மற்றும் ஜேசுதாசன் றொகான் பீரிஸ் ஆகியோர் குருக்களாகவும் அருட்சகோதரர் மரியநாயகம் கிரைன்ரன் குருஸ் அவர்கள் திருத்தொண்டராகவும் திருநிலைப்படத்தப்பட்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை நோபட் அந்த்ராடி, அமலமரித்தியாகிகள் சபை குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி பொக்கம், அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

