யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி அருட்சகோதரர்களுக்கான பொதுநிலை திருப்பணிகள் வழங்கும் திருச்சடங்கு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்ற திருச்சடங்கு திருப்பலியில் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மறைமாவட்டங்களை சேர்ந்த 05 அருட்சகோதரர்களுக்கு வாசகர்கள், பீடத்துணைவர்கள் ஆகிய திருப்பணிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அருட்சகோதரர்கள் ஜேசுதாஸ், அனஸ்ராஜ் மற்றும் இருதய வினோதன் ஆகியோர் வாசகர்களாகவும் அருட்சகோதரர்கள் பொனிபஸ் மற்றும் ஜெயசுதன் ஆகியோர் பீடத்துணைவர்களாகவும் பணிகளை ஏற்றுக்கொண்டனர்.

அத்துடன் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “அதிபர் மற்றும் ஆசான்கள் தினம்” நவம்பர் மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து அதிபர் ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக குருமட மாணவர்களின் மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கல்லூரி பணியாளர்கள், குரு மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து அன்று மாலை மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் நடைபெற்றன.

By admin