இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய முயற்சியின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட மதங்களுக்கிடையிலான தேசிய மாநாடு நவம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மதத் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
இம்மாநாட்டில் போதைப்பொருள் பாவனையால் உருவாகிவரும் சமூக அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான கூட்டுப் பொறுப்பு, மதங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் அற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மதச் சமூகங்களின் செயற்பாட்டுப் பங்களிப்பு ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டன.
இம்மாநாட்டில் யாழ். மறைமாவட்டத்திலிருந்து 20 குருக்கள் துறவிகள் பங்குபற்றினர்.

