புங்குடுதீவு பங்கின் புனித சவேரியார் வின்சென்டி போல் பந்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் நவம்பர் மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்இரத்ததான முகாமில் 20ற்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

