மாரீசன்கூடல் பங்கின் சேந்தாங்குளம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆவணி மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி புரட்டாதி மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை சேந்தான்குளம் புனித ஆரோக்கியநாதர் ஆலய இளையோரால் பங்குமக்களுக்கான விளையாட்டுக்கள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்றின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

