இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் றெக்ணோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin