யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா அன்று மாலை அன்னையின் திருச்சொருப வீதிவல தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin