பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டு கழகத்தின் மறைந்த கழக வீரர்களின் நினைவாக மாகாண ரீதியாக முன்னெடுக்கப்பட்ட பளுதூக்கல் போட்டி புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியால மாணவர்களான செல்வி எனிட்ரோஸ் பெண்களுக்கான 53Kg எடைப்பிரிவில் முதலாம் இடத்தையும் செல்வன் சரோன் ஆண்களுக்கான 77Kg எடைப்பிரிவில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

சுண்டுகுழி மகளிர் கல்லூரி மாணவிகளான செல்வி மரியதிலக்ஸி பெண்களுக்கான 69Kg எடைபிரிவிலும் செல்வி ஆர்த்திகா 86Kg ற்குமேல் எடைபிரிவிலும் முதலாம் இடங்களையும் செல்வி சாதனா 86Kg எடைப் பிரிவிலும் செல்வி அஸ்லின் 48Kg எடை பிரிவிலும் மூன்றாமிடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அனலைதீவு சதாசிவம் பாடசாலை மாணவர்களான செல்வன் தனோயன் ஆண்களுக்கான 110Kg எடை பிரிவிலும் செல்வன் பிரவீன் 71Kg எடைப்பிரிவில் இரண்டாம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் முத்துத்தம்பி மகா வித்தியாலய மாணவன் செல்வன் பிரதீப் ஆண்களுக்கான 98Kg எடைப்பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

வி கே அக்கடமி மாணவர்களான பிரணவன் ஆண்களுக்கான 79Kg எடைபிரிவிலும் கிரன்ராஜ் 88Kg எடை பிரிவிலும் இரண்டாம் இடங்களையும் ரெஸ்ஸன் 60Kg எடைபிரிவிலும் கயாளன் 65Kg எடை பிரிவிலும் மூன்றாம் இடங்களையும் பெண்களுக்கான போட்டியில் ஜெகனிகா 58Kg எடைபிரிவில் முதாலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

By admin