காமா அபாகஸ் சர்வதேச கணிதப்போட்டிப் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இப்போட்டியில் பல்லவராயன்கட்டு டொண் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையை சேர்ந்த 34 மாணவர்கள் பங்குபற்றி 6 மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று, வெற்றிக் கேடயங்களையும் ஏனைய 28 மாணவர்கள் ஆறுதல் பரிசில்களையும் பெற்றுக்கொண்டனர்.

பல்லவராயன்கட்டு டொண்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் காமா அபாகஸ் கணிதச் செயற்பாட்டுக் குழுவினால் கடந்த ஆறு மாதங்களாக கணிதப் பயிற்சி வகுப்புகள் நடாத்தப்பட்டதுடன் இவ்வகுப்புக்களில் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிகளும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin