யாழ். திருக்குடும்ப மாகாண சபையின் 18வது மாகாண சங்கம் இம்மாதம் 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை யாழ் திருக்குடும்ப மாகாண இல்லத்தில் நடைபெற்றது.
மாகாணத்தலைவி அருட்சகோதரி ஜொய்லின் ராஜி ஸ்ராலின் அவர்களின் தலைமையில் “கூட்டு விழிப்புணர்விற்கான அழைப்பு” என்னும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரெட்ணம் அவர்கள் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 44 அருட்சகோதரிகள் பங்குபற்றி பயனடைந்தனர்.

