சலேசியன் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் யாழ்ப்பாணம் ஆக்சீலியம் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட பெற்றோருக்கான சிறப்பு கருத்தமர்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

முன்பள்ளி பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரிடா டொண் பொஸ்கோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நவீன தொடர்பாடல் சாதனங்களின் பவனையும் அதனால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளும் எனும் தலைப்பில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து கருத்துரை, விழிப்புணர்வு பட காட்சிப்படுத்தல் என்பவற்றின் ஊடாக கருத்தமர்வை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 30ற்கும் அதிகமான பெற்றோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin