யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட “கலைச்சாரல்” நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்களின் நடனம், செல்வன் டிலீப் அமுதன் பிரணீத் அவர்களின் சிலம்பாட்டம், புத்தளம் திருமறைக்கலாமன்றத்தினரின் நடனம், திரு. சிவானந்தன் அகிலன் அவர்களின் இசைக்கச்சேரி என்பவற்றுடன் இளவாலை திருமறைக்கலாமன்றத்தின் ‘கருவா கல்வியா’ எனும் சமூக நாடகமும் மேடையேற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் திரு. டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மாவட்ட செயலக பதில் சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஸ்ணாநந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் பங்குபற்றினர்.

By admin