புதுக்குடியிருப்புப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண தரம் உயர் தர பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர், கல்விப் புலங்களில் சாதித்தவர்கள், கலை மற்றும் ஏனைய துறைகளில் தேசிய மட்டங்களில் சாதித்தவர்கள், அரச பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களென 100க்கும் மேற்பட்ட சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறப்பு நிகழ்வாக மறைக்கல்வி மாணவர்களால் ‘சின்றெல்லா’ ஆங்கில நாடகமும் மேடையேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் உள்நாட்டு இறைவரித்திணைக்கள பிரதி ஆணையாளர் திரு. செபஸ்தி அருள் ராஜ்குமார், வவுனியாப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி மதிவதனி மற்றும் புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலாளர் கிரிதரன் டென்சியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அதிபர் திரு. நீவிட் ஜீவராசா, புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் யோசப், சட்டத்தரணி திரு. தனஞ்சயன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

By admin