யாழ். பேராலய பங்கிற்குட்பட்ட குருநகர் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களும்; தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் ஆசீரை யாழ். மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் வழங்கிவைத்தார்.

By admin