குடும்பங்களில் இறைழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தினால் முன்னெடுக்கப்படும் “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு ஆவணி மாதம் 28,29,30 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் அறிமுகம், அருட்சகோதரர்களின் அனுபவப்பகிர்வு, திருச்செபமாலை, திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் வழ்வைத்தேடல் கருத்தமர்வு, யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊட கமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ‘தொடர்பாடல் சாதனங்களின் சாதக பாதக விளைவுகள்’ என்னும் தலைப்பிலான கருத்தமர்வு, திருப்பலி, பொது ஒன்றுகூடல் என்பன இடம்பெற்றன.

ஆவணி மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை விஜேந்திரன் அவர்களின் குருத்துவத்தை நோக்கிய வழிகாட்டல் கருத்தமர்வு, சிறிய குருமட மாணவர்களின் இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு, யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர்கள் அருட்தந்தை குயின்சன் பெர்னாண்டோ மற்றும் டினேஸன் ஆகியோரின் இறை அழைத்தல் சிறப்புரை, நற்கருணை வழிபாடு, திரைப்பட காட்சிப்படுத்தல் என்பன இடம்பெற்றன.

ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து குழுக்கலந்துரையாடல் யாழ். அகவொளி குடும்பநல லிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ‘இறை அழைத்தலை வளர்ப்பதில் குடும்பத்தின் பங்கு’ என்னும் தலைப்பிலான கருத்தமர்வு, ‘ஒரு நாள் குடுமடத்தில்’ குறும்பட காட்சிப்படுத்தல், பங்கேற்பாளர்களின் அனுபவ பகிர்வு என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் குருமட மாணவர்களுட்பட 90 வரையான மாணவர்கள் பங்குபற்றினர்.

By admin