பூநகரி பங்கிற்குட்பட்ட மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் ஆயத்தநாள் மறையுரைகளை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேம்ஸ் ஜெனிஸ்ரன் அவர்களும் வழங்கினார்.

பழமை வாய்ந்ததும், வரலாற்று சிறப்புமிக்கதுமான மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல திருவிழாவிற்கு பாசையூர், பூநகரி பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து புனிதரின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin