புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சூசையப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளறேசியன் சபை அருட்தந்தை வரதன் குலாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலைப் பவனி, மகிழ்வூட்டல் நிகழ்வுகள், விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள், ஆடல் பாடல், அனுபவ பகிர்வு, இரவு உணவு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 200 வரையான தாத்தா பாட்டியர் பங்குபற்றியிருந்தனர்.

