மட்டக்களப்பு மறைமாவட்டம் புனித இஞ்ஞாசியார் ஆலய 110ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் டிலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆடி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இயேசு சபை மட்டக்களப்பு மாவட்ட மேலாளர் அருட்தந்தை சகாயநாதன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
நற்கருணைவிழா நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெற்றன.

