பதுளை மறைமாவட்டம் பாதினாவெல புனித லோறன்சியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றொபேட் கிளாறட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆவணி மாதம் 01ஆம் சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை றொபேட் கிளாறட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் நற்கருணைவிழா ஆராதனையை பதுளை மறைமாவட்ட நிதி முகாமையாளர் திருத்தொண்டர் டினால் வியேசூர்ய அவர்கள் நெறிப்படுத்தினார்.
திருவிழா திருப்பலியில் இயேசு சபை அருட்தந்தை றிச்சர்ட் அவர்களும் இணைந்து செபித்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனி ஆசீர்வாதம் என்பவற்றுடன் அருட்தந்தை றொபேட் கிளாறட் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் இடம்பெற்றது.

