மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் பங்கிற்குட்பட்ட முதலைகுத்தி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித லூர்து அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய அபிசேகமும் மணிக்கோபுரத் திறப்பு விழாவும் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரனின் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தையும் மணிக்கோபுரத்தையும் ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் குருக்கள் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin