மக்கள் மத்தியில் குடும்ப வன்முறை, போதைப்பொருள் பாவனை, மது பாவனை, தற்கொலை எண்ணங்கள், தொடர்பாடல் சாதனங்களின் பாவனை, கடன் பிரச்சினைகள் போன்ற சமூக பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் மறைமாவட்ட குடும்பநல பொதுநிலையினர் ஆணைக்குழுவும் மன்னார் மாவட்ட “Clean Sri Lanka” அமைப்பும் இணைந்து முன்னெடுத்த ‘தீதும் நன்றும்’ விழிப்புணர்வு வீதி நாடகம் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடும்பநல பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் தாழ்வுபாடு வீதியிலுள்ள குடும்பநல பொதுநிலையினர் நிலையத்தில் நடைபெற்ற இந்நாடகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்கள் அருட்தந்தை ரவிச்சந்திரன் மற்றும் திரு. நீக்கிலஸ் ஆகியோரின் நெறியாள்கையில் சுயம்பு கலைக்குழுவினரால் ஆற்றுகை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட மேலதிக நிர்வாக அரசாங்க அதிபர் திரு. பிரதீப், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், அருட்தந்தை ரவிச்சந்திரன், மதகுருமார், “Clean Sri Lanka” அமைப்பின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், இலங்கை போக்குவரத்து அதிகாரசபையின் வடக்கு மாகாண தலைவருமான பொறியியலாளர் விமலேஸ்வரன், பொதுநிலையினர் பேரவை தலைவர் திரு. பிலிப்புப்பிள்ளை, கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

By admin