ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கேவலார் அன்னை திருத்தல 39வது திருப்பயண வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை நிரூபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 07ஆம், 08ஆம் திகதிகளில் நடைபெற்றது.

07ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மாலை செபமாலையுடன் வழிபாடுகள் ஆரம்பமாகி நற்கருணை ஆராதனையும் பவனியும் 09ஆம் திகதி சனிக்கிழமை திருவிழா திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இவ்வழிபாடுகளில் ஜேர்மன் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பங்குபற்றி அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin