மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் வரவேற்பு சுரூபத்தில் ஆவணி மாதம் 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மருதமடு அன்னையின் கொடியேற்றிவைக்கப்பட்டது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்கள் கொடியேற்றி திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் பங்குமக்கள், கிராம மக்கள் மற்றும் மடு யாத்திரியர்கள் கலந்து செபித்தனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தால் வழங்கப்பட்ட இக்கொடி மடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவிற்கு பாதயாத்தரை செல்லும் யாத்திரிகர்களின் ஆன்மீகத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்றிவைக்கப்பட்டது.

By admin