இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆலயத் திருவிழாவிற்கு ஆயத்தமாக ஆடி மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை வலயரீதியாக வலயக்கொடிகள் ஏற்றப்பட்டு வலயத்திருப்பலிகளும் செபமாலையும் இடம்பெற்றன.

தொடர்ந்து 16ஆம் திகதி வியாழக்கிழமை புனிதரின் கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பிரான்சிஸ்கன் சபை அருட்தந்தை வினோத் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

அத்துடன் திருவிழாவை சிறப்பித்து ஆவணி மாதம் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்பிய ஒன்றுகூடல் நிகழ்வும் ஆலயத்தில் இடம்பெற்றது.

 

By admin