யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் ஆவணி மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரை நடைபெற்றது.
ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பணியாளர்கள் மாத்தளை, கண்டி, மகியங்கனை, பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்களை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டனர்.

