பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு மிருசுவில் பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 21 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

