சுவிஸ் நாட்டில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரும் கலாச்சார ஒருங்கிணைப்பாளருமான திரு. வின்ஸ்லோஸ் அன்ரனி அவர்களின் ‘வேரிழந்த வாழ்க்கையும் தமிழர் பாதையும்’ நூல் வெளியீடு ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான வெளியீட்டுரைiயை ஜப்பான் கச்சுயின் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் முனைவர் மனோண்மணி சண்முகதாஸ் அவர்களும் நயப்புரையை அமலமரித்தியாகிகள் சபை நலநோம்பு மைய இயக்குநர் அருட்தந்தை அன்புராசா அவர்கள் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் தகைசால் தமிழ் பேராசிரியர் திரு. சண்முகதாஸ், யாழ். திருமறைக்கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை ஜெயசேகரம், அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நூல் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

By admin