அமலமரித்தியாகிகள் சபை யாழ். அமதிகள் குடும்ப பணியகத்தின் “ பசுமை காப்போம்” செயற்திட்டத்தின் ஒரு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பணியக இணைப்பாளர் அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “வீட்டுக்கொரு மரம்” என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஒரு அங்கமாக அரியாலை பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 16 வீடுகளுக்கு பழமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளாக அமதிகள் குடும்ப பணியகத்தால் மரநடுகை செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நலிவுற்ற குடும்பங்களின் பாதுகாவலரான சபை ஸ்தாபகர் புனித இயூயின் டி மசனட் அவர்களின் ஆசீருடன் அமதிகள் குடும்ப பணியகம் கடந்த 05 ஆண்டுகளாக நலிவுற்ற குடும்பங்களுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin