முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வகுப்பறை கட்டடத்தொகுதி திறப்புவிழா ஆவணி மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் ரத்னாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கட்டடதொகுதியை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிரஞ்சன், மாகாண கல்வி பணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் திரு. இரத்தினம் தமிழ்மாறன், முல்லைத்தீவு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன், அருட்சகோதரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.
இக்கட்டட தொகுதி மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையில் 3 கோடி 80 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

