யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த கால செயற்பாட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு புதிய நிர்வாகத் தெரிவு, பொதுநிலையினர் யாப்பு விளக்கவுரை, கருத்துப்பகிர்வு என்பன இடம்பெற்றன.

புதிய நிர்வாகத்தெரிவில் யாழ் மறைக்கோட்டத்தை சேர்ந்த திரு. எசார்வே அவர்கள் தலைவராகவும் திருமதி. ஜெயந்தி தியானமுத்து அவர்கள் செயலாளராகவும் கிளிநொச்சி மறைக்கோட்டத்தை சேர்ந்த திரு. மதுரநாயகம் அவர்கள் பொருளாளராகவும் இளவாலை மறைக்கோட்டத்தை சேர்ந்த திரு. இரட்ணராஜா அவர்கள் உபதலைவராகவும் தீவக மறைக்கோட்டத்தை சேர்ந்த திருமதி. நோர்ஜசின் அவர்கள் உபசெயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை யேசுரட்ணம், மறைக்கோட்டக் கழகங்களின் நிர்வாக உறுப்பினர்கள், மறைமாவட்ட பக்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்களென 45 பேர் கலந்துகொண்டனர்.

By admin